தேவந்திர குல வேளாளர் கோரிக்கை மனு…உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

Default Image

தேவேந்திர குல வேளாளர் கோரிக்கை தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைத்ததை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர் கோரிக்கை தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைத்துஅரசு 4.3.2019 பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யவும், தடை விதிக்கக்கோரி திருச்சி டி.வளவனூரைச் சேர்ந்த எம்.அமர்நாத் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

எம்.அமர்நாத்  தாக்கல் செய்த இந்த மனுவில் தமிழ்நாட்டில்  எஸ்சி பட்டியலில் உள்ள பள்ளர், குடும்பன், தேவேந்திரகுலத்தான், கடையன், பன்னாடி மற்றும் காலாடி ஆகிய வகுப்புகளை எஸ்.சி பட்டியலில் இருந்து நீக்கியும் 6 வகுப்புகளையும் சேர்த்து தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிக்க அரசிடம் மனு அளிக்கப்பட்டது.

எஸ்சி பட்டியலில் ஒரு சாதியை சேர்க்கவோ, நீக்கவோ, பிரிக்கவோ நாடாளுமன்றத்துக்கு தான் அதிகாரம் உள்ளது.குடியரசு தலைவர் தான் இது குறித்து அறிவிப்பாணை பிறப்பிக்க முடியும். மாநில அரசுக்கு அத்தகைய அதிகாரம் கிடையாது எனக் கூறப்பட்டுள்ளது.

இம்மனு மீதான விசாரணை சென்ற வாரம் வந்தபோது, ஜாதி பிரிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்பது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு நகல் மற்றும் 1981-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பட்டியல் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தங்களை ஒரு எதிர்மனுதாரராக சேர்க்கவும், மனுவை தள்ளுபடி செய்யவும் தமிழர் விடுதலை களத்தின் தலைவர் வழக்கறிஞர் ராஜ்குமார், மூவேந்தர் புலிப்படைத் தலைவர் வழக்கறிஞர் பாஸ்கர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்து உள்ளனர்.

இதில், தேவேந்திர குல வேளாளர் என்று அரசாணை பிறப்பிக்கவும், மேலும் இது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு.

கடந்த 30 ஆண்டுகளாக பல சாதி தொடர்பாக ஆய்வு செய்ய மாநில அரசு குழு அமைத்து உத்தரவிட்டு உள்ளது.

மேலும் மனுவில்சமூக பெண்களை தவறாக குறிப்பிட்டு உள்ளார். இதற்காக மனுதாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பட்டியல் வெளியேற்றம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் மனு மட்டுமே கொடுத்து உள்ளோம். எங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

தவறான தகவல்களை நீதிமன்றத்துக்கு தெரிவித்து உள்ளார். இதனால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றுஅந்த மனுக்களில் கூறப்பட்டு உள்ளது. இந்த மனுக்கள் அக்.,14 (புதன்)அன்று விசாரணைக்கு வருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்