இன்று முதலமைச்சர் பழனிசாமி தூத்துக்குடி வருகை
முதல்வர் பழனிசாமி இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் முதலமைச்சர் , கடந்த மாதம் 23 ஆம் தேதியில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தார்.
அந்தசமயம், பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியதால், முதல்வரின் இந்த 3 மாவட்ட சுற்றுப் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி தற்பொழுது இன்று மற்றும் நாளை தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் முதலமைச்சர் பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.
இன்று தூத்துக்குடிக்கு விமானம் மூலம் காலை வருகிறார் முதலமைச்சர் பழனிசாமி. அதன்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அடிக்கல் நாட்டுகிறார். அதன்பின் தூத்துக்குடியில் முடிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் தொடங்கி வைக்கிறார். மேலும், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை, மேம்பாட்டு திட்டம் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.