தலைவியாய் கூட அல்ல! மனுஷியாய் மதிக்க வேண்டாமா? – கவிஞர் வைரமுத்து
தலித் பெண் தரையில் அமரவைக்கப்பட்ட விவகாரம் குறித்து கவிஞர் வைரமுத்து ட்வீட்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்குதிட்டை பெண் ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றி வருபவர் ராஜேஸ்வரி. இவர் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த ஜூலையில் நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இதனையடுத்து, ஊராட்சிமன்ற துணை தலைவர் மோகன்ராஜ் மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர் சிந்துஜா ஆகியோர் செய்யப்பட்டுள்ளது. தலித் பெண் அவமரியாதையாக நடத்தப்பட்ட விவகாரம் குறித்து பிரபலங்கள் பலரும் தங்களது கண்டன குரலை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில்,இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்வீட்டர் பக்கத்தில், தனது பாணியில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
பட்டியலினத்துத் தாயொருத்தி
தரையில் வீசப்படுவதா?அவரென்ன மண்புழுவா?
தலைவியாய்க் கூட அல்ல…
மனுஷியாய் மதிக்க வேண்டாமா?என் வெட்கத்தில்
துக்கம் குமிழியிடுகிறது.தேசியக்கொடி அரைக்கம்பத்தில்
பறக்க வேண்டிய
துயரங்களுள் இதுவும் ஒன்று.— வைரமுத்து (@Vairamuthu) October 11, 2020