90 ஆண்டுகள் கழித்து மைனே தீவில் பிறந்த குழந்தை!

அமெரிக்காவில் மைனே தீவில் 90 ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தை.
இரு வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் மைனே தீவில், ஆரோன் கிரே மற்றும் எரின் பெர்னால்டு தம்பதியினருக்கு, இந்த தீவில் 90 ஆண்டுகளுக்கு பின் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு அசெலியா பெல்லி கிரே என பெயரிட்டுள்ளனர்.
இந்நிலையில்,கால்வின் கூலிட்ஜ் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்ததில் இருந்து, இந்த தீவில் யாருக்கும் குழந்தை பிறக்கவில்லை. இந்த தீவில் கடைசியாக, 1927-ல் தான் ஒரு குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து குழந்தையின் தாய் கூறுகையில், ‘எனது குழந்தை அசெலியாவின் பிறப்புக்கு பிறகுதான், மைனே தீவில் கடைசியாக பிறந்த நபர் 2005-ம் ஆண்டில் இறந்துவிட்டார் என்பதை அறிந்து கொண்டேன்.’ என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025