கடிதம் விவகாரம்.. அரசிடம் கேட்டே செயல்படுகிறேன்-சூரப்பா விளக்கம்..!

Default Image

மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் எழுதியதாக சர்ச்சை எழுந்த நிலையில் இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விளக்கமளித்தார். அதில், அண்ணா பல்கலையின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை ஒப்புதலுடன் அறிக்கை தயாரிக்கப்பட்டது . “என்போல மற்ற துணை வேந்தர்கள் யாரும் அரசை சந்தித்தது இல்லை.

அரசிடம் கேட்டே செயல்படுகிறேன்” எனவும் உயர்நிலை சிறப்புத் தகுதி கிடைத்தால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு பெரிய அளவில் வருவாய் கிடைக்கும். இந்த நிதியின் மூலம் உள்கட்டமைப்பு, ஆய்வு கட்டமைப்பு வெளிநாட்டு பல்கலைக்கழகம் தொடர்பு போன்ற பல வாய்ப்புகள் ஏற்படும் என தெரிவித்தார்.

மற்றபடி இந்த உயர்நிலை சிறப்பு தகுதி காரணமாக பல்கலைகழகத்தில் நிர்வாக ரீதியான எந்த மாற்றமும் செய்யபடாது  என துணைவேந்தர் சூரப்பா விளக்கம் கொடுத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்