விடிய விடிய சென்னை விமான நிலையத்தில் சிபிஐ சோதனை..???
சென்னை விமான நிலைய சரக்கு முனையத்தில் முறைகேடுகள் நடப்பதாக குவிந்த புகாரை அடுத்து சிபிஐ விடியவிடிய சோதனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை விமான நிலைய சரக்கு முனையத்தில் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் பொருட்களின் விலைகளை குறைத்து நிர்ணயம் செய்து வரிவிதிப்பதாகவும்,வரியே விதிக்காமல் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கின்றனர் என்று சுங்க அதிகாரிகள் சிலர் மோடி செய்வதாக புகார்கள் எழுந்தது.
இந்நிலையில் சரக்கு முனைத்திற்கு விரைந்த சிபிஐ ஆவணங்களை அனைத்தையும் சோதனை செய்தனர்.மேலும் சுங்க அதிகாரிகளிடமும் இது குறித்து விசாரணை
நடத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் புகார் தெரிவிக்கப்பட்ட அதிகாரிகள் அனைவரையும் சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்டை மாநிலம் கேரளாவில் தங்கக் கடத்தல் தகராறு பல கிளைகளாக சென்று கொண்டே இருக்கிறது.
புலனாய்வு துறையும் துப்பு துலங்கி கொண்டே வருகிறது.இந்நிலையில் இவ்விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது.கேரள தலைமை செயலகத்தில் பணிபுரியும் நபர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் கூறப்பட்டது.
இந்நிலையில் இவ்விசாரணை தீவிரமாக நடந்து கொண்டு வருகிறது இவ்வாறு இருக்க புகார் எழுந்த சுங்கத்துறை அதிகாரிகள் அனைவரையும் சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.