#Breaking: “நீட் தேர்வு முடிவுகளை 16 ஆம் தேதி வெளியிட வேண்டும்”- உச்சநீதிமன்றம்
கொரோனா பரவலுக்கு மத்தியிலும் நடத்தப்பட்ட “நீட்” தேர்வின் முடிவுகளை அக்.16 ஆம் தேதி வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, கொரோனா பரவலுக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி கடந்த மாதம் 13 ஆம் தேதி நடந்தது. இந்த தேர்வினை 3,842 மையங்களில் 15,97,433 பேர் எழுதினார்கள். அதில் தமிழகத்தில் மட்டும் 1,17,990 மாணவர்கள் எழுதினார்கள்.
இந்தநிலையில், கொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் சிலர் தேர்வு எழுத முடியாமல் போனது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, நீட் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு அக்டோபர் 14 ஆம் தேதி தேர்வு நடத்தி, முடிவுகளை 16 ஆம் தேதி வெளியிட வேண்டுமெனவும் தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.