தியேட்டர்கள் திறப்பு.. அக்..20 அறிவிப்பு – கடம்பூர் ராஜூ..!
தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு பற்றி அக்.20 அல்லது 21-ம் தேதி அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும், திரையரங்கு உரிமையாளர்களை அழைத்து முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார், இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு திரையரங்குகள் திறக்கும் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு காலத்திலும் திரைப்படத்துறையினருக்கு தமிழக அரசு சில தளர்வுகளை கொடுத்துள்ளது. மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் திரையரங்குகளை வருகின்ற 15-ம் தேதி முதல் திறக்கலாம் என அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் காரணமாக திரைப்படத்துறை மற்றும் திரையரங்கு இயங்க அனுமதி மறுக்கபட்டது. இதனால், பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது.