இன்று இந்த சாதனையை செய்யவாரா கிங் கோலி…?
விராட்கோலி இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடக்கும் போட்டியில் 3 சிக்ஸர்கள் அடித்தால் ஐபிஎல் போட்டிகளில் அவர் அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 200 ஆகிவிடும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி இந்த சீசன் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை 6 போட்டிகள் விளையாடி 223 ரன்கள் அடித்துள்ளார். கடந்த சனிக்கிழமை சென்னை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கூட மிகவும் சிறப்பாக விளையாடி 90 ரன்கள் குவித்தார்.
மேலும் இந்த வருடம் அதிகம் ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளார். இதுவரை மொத்தமாக 183 போட்டிகள் விளையாடி 5635 ரன்கள் அடித்து ஐபிஎல் போட்டிகளில் அதிகம் ரன்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையும் வைத்துள்ளார்.
இந்த நிலையில் இன்று பெங்களூர் அணி கொல்கத்தா அணிக்கு எதிராக ஷார்ஜா மைதானத்தில் மோதவுள்ளது. இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி 3 சிக்ஸர்கள் அடித்தால் ஐபிஎல் போட்டிகளில் அவர் அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 200 ஆகிவிடும். இதுவரை ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலி 197 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.