இது போன்ற குற்றங்கள் நடப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் – முருகன்!

இது போன்ற குற்றங்கள் நடப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என முருகன் கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் தெற்குத்திட்டை ஊராட்சி தலைவராகிய ராஜேஸ்வரி என்பவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் என்பதால் அவமதிக்கப்பட்டு தரையில் அமர வைக்கப்பட்டார். இதனால் ஊராட்சி செயலாளர் சுஜாதா அவர்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஊராட்சி துணைத் தலைவர்கள் மற்றும் தலைவர்கள் சார்ந்து இருக்கக்கூடிய ஜாதியின் அடிப்படையில் அவர்களை அவமரியாதையாக நடத்தக் கூடிய நிலைமை தமிழக அரசினால் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.