இன்று 9,000கோடி ஒப்பந்தம்..கால்பதிக்கிறதா?? பிரிட்டானியா-அப்போலோ-ஐநாக்ஸ் நிறுவனங்கள்!?

 புதிதாக 9,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய வகைசெய்யும் தமிழக அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தம்   இன்று கையெழுத்தாகிறது.

தமிழக அரசு, பொருளாதாரத்தை மீட்க   பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குஇதில் றிப்பாக, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அவ்வாறு குறிப்பாக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க, வெளிநாட்டு துாதர்கள் உடன் சந்திப்பு மற்றும் சிறப்பு பணிக்குழு அமைத்து பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

வெளிநாட்டு நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு செய்ய, அழைப்பு விடுத்தும், தொழில் நிறுவனங்களுக்கு, முதல்வர் அவ்வப்போது கடிதம் எழுதிய வண்ணம் இருந்து வருகிறார். முதலீடு செய்ய வரும்படி, முன்னணி மோட்டார் நிறுவனங்களுக்கு கடந்த ஜூன் மாதத்தில் அழைப்பு விடுக்கப்பட்டது.

கொரோனாத் தொற்று மற்றும் அதனால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கிலும் கூட 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு பெறப்பட்டது.தற்போது, மேலும், 10,000 கோடி ரூபாய் வரை முதலீடு கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறுகையில்தமிழகத்தில் தொழில் துவங்க, ஏப்ரல் முதல் ஜூலை வரை, 41 நிறுவனங்கள், அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.இதன் மூலம் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடும், 66 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்க உள்ளது. மேலும் கூடுதலாக, 9,000 கோடி ரூபாய் முதலீடுகள் கிடைக்க உள்ளது.அதன்படி 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யவுள்ளது.இதன் வாயிலாக, 6,000த்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது என்று கூறினர்.

கொரோனா ஊரடங்கு காலத்திலும், வெளிநாட்டு முதலீடுகளை அதிகம் ஈர்த்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகத்திற்கு 2த்தில் உள்ளது. ‘பிராஜக்ட் டுடே’ என்ற நிறுவனம் நடத்திய ஆய்வறிக்கையில் இந்த தகவல் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிறுவனம்,நடப்பாண்டில் ஜூலை முதல் செப்., வரை 3 மாதங்களில், ஒவ்வொரு மாநிலமும் ஈர்த்துள்ள, வெளிநாடு முதலீடுகள் குறித்த விபரங்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி, சத்தீஸ்கர் மாநிலம், 114 திட்டப் பணிகளில் 35 ஆயிரத்து, 771 கோடி ரூபாய் முதலீட்டை தன் வசப்படுத்தி ஈர்த்து, பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

அதற்கு அடுத்ததாக தமிழகம் 132 திட்டப் பணிகளுக்கு, 23 ஆயிரத்து, 332 கோடி ரூபாய், முதலீடுகளை ஈர்த்து, 2 இடம் பெற்றுள்ளது.இதனைத் தொடர்ந்து கர்நாடகா, குஜராத், மஹாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ஆந்திர போன்ற மாநிலங்கள், அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றது.

முதலீடு குறித்த விபரத்தை, முதல்வர் தனது டுவிட்டர்’ பக்கத்தில் தமிழகத்தின் பொருளாதாரத்தை சரியான பாதையில், கொண்டு வருவதற்கான, எங்களுடைய உறுதியான முயற்சிகள் பலனை தருகின்றன என்று, குறிப்பிட்டு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 14 நிறுவனங்களோடு ரூ.9,000 கோடி தொழில் முதலீடு செய்ய தமிழக அரசுடன் இன்று ஒப்பந்தம் செய்கிறது.அதன்படி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

மேலும் KSW எனர்ஜி லிமிடெட் மற்றும் அப்போலோ டயர்ஸ், பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனங்கள் ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன.

அவ்வாறு தமிழகத்தில் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனம் அமைக்கப்படுகிறது.ஐநாக்ஸ் லிக்யூடு ஆக்சிஜன் சிலிண்டர் ஆலை ஓசூரிலும், அப்போலோ டயர் ஆலை ஓரகடத்திலும் அமைக்கப் படுவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்  தமிழகத்தில்14 நிறுவனங்கள்  தொழில் முதலீடு செய்வதன் மூலமாக சுமார் 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



author avatar
kavitha