“10 பைசா”-விற்கு பிரியாணி விற்பனை.. தீர்ந்தால் மக்கள் ஏமாற்றம்!

Default Image

உலக பிரியாணி தினத்தை முன்னிட்டு திருச்சியில் 10 பைசாவிற்கு பிரியாணி என அறிவித்த உணவகம் முன்பு குவிந்த பொதுமக்கள், பிரியாணி தீர்ந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

என்னதான் பிட்சா, பர்கர் என அந்நிய உணவுகளை மக்கள் விரும்பினாலும், அனைவரின் மனதின் ஆழத்தில் பதிந்த ஒரே உணவு, பிரியாணி. அந்தவகையில், உலகளவில் இன்று உலக பிரியாணி தினம் கொண்டாடப்படுகிறது.

இதனைமுன்னிட்டு பல பிரியாணி கடைகளில் பல சலுகைகள் அறிவிக்கப்பட்ட நிலையில், திருச்சி தில்லை நகரில் உள்ள ஒரு பிரியாணி கடையில் 10 பைசாக்கு பிரியாணி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. அதனைதொடர்ந்து பிரியாணி வாங்குவதற்கு மக்கள் பலரும் 10 பைசா நாணயத்துடன் அந்த கடைக்குமுன் திரண்டனர்.

பிரியாணியை வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காலை முதல் மக்கள் காத்திருந்தனர். மேலும், பிரியாணி என்றவுடன் அந்த கடைமுன் சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்காத காரணத்தினால், அங்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

இந்நிலையில் அந்த கடையில் காலை 10 மணி முதல் 100 பேருக்கு மட்டுமே பிரியாணி வழங்கப்பட்டது. இதனால் அங்கு நீண்ட வரிசையில் காத்துக்கிடந்த மக்கள், ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்