3 ஆண்டு கழித்து நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவம்-25,000 பக்தர்களுக்கு அனுமதி!

Default Image

ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவிற்கு 25 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்க உள்ளது. இந்நிலையில் தினமும் 20,000  முதல் 25,000 பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதைத் தொடர்ந்து அக்.,16 தேதியிலிருந்து அக்.,24ந்தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.

3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கின்ற இந்தப் பிரம்மோற்சவ விழாவில் கோவிலின் 4 மாடவீதியில் வாகன ஊர்வலம் நடத்தவும் வாகன ஊர்வலத்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்ய ரூ.300 டிக்கெட்  பக்தர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்ரீவாணி டிரஸ்ட்டுக்கு காணிக்கை அளித்த பக்தர்கள்,வி.ஐ.பி. தரிசன டிக்கெட் பக்தர்கள், உள்ளூர் பக்தர்கள் எனத் தினமும் 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் பக்தர்கள் வரை 4 மாடவீதிகளில் அமர வைக்கப்படுவர் என்றும் அடையாள அட்டை வைத்திருக்கும் உள்ளூர் பக்தர்கள் மட்டும் வாகனச் சேவையை பார்க்க 4 மாடவீதிகளில் அனுமதிக்கப்படுவர்.

கொரோனாத்தொற்றை தடுக்கும் வகையிலும், பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் அமர நான்கு மாடவீதிகளில் கேலரிகளில் 6 அடி தூரத்துக்கு வெள்ளை நிறத்தில் கட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் நவராத்திரி பிரம்மோற்சவத்திற்கு  கொடியேற்றம், கொடியிறக்கம் மற்றும் தேரோட்டம் நடைபெறாது என்று திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்