இனி எங்கிருந்தாலும் ஒட்டு போடலாம்! அதிரடி காட்டும் தேர்தல் ஆணையம்??

Default Image
நாட்டில் எந்த பகுதியில் இருந்தும் பீகார் தேர்தலில் ஓட்டளிக்க அந்த மாநில வாக்காளர்களுக்கு வாய்ப்பு ஏற்படும்.
மக்கள் தங்களது சொந்தக் காரணங்களுக்காக இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் ஓட்டு இருக்கும் மாநிலங்களில் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களின் போது இவர்களால் ஓட்டு போட முடியாத நிலையே தொடர்ந்து ஏற்படுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுகிறது.
இவர்கள் போன்றவர்களாலும் தேர்தல்களில் வாக்கு இழப்பு ஏற்படுதாக கூறப்படுகிறது.அதன்படி கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் ஒரு நிறுவனம் நடத்தியஆய்வில் சுமார் 29 கோடி ஓட்டுகள் இழப்பு ஏற்படுவதாக கண்டுப்பிடிக்கப்பட்டது.
 பீகார் மாநிலத்தில் அக்.,28ந்தேதி முதல் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது.சுமார் 7.2 கோடி வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதி வாய்ந்தவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 18.87 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் வெளிமாநிலங்கள் மற்றும்  பிற மாவட்டங்கள் வசித்து வருகின்றனர்.
ஆனால் கொரோனாத் தொற்று மற்றும் தேர்தலுக்காக 16.6 லட்சம் பேர் சொந்த ஊர் திரும்பிய நிலையில் மீதம் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் சொந்த ஊர் திரும்பவில்லை. இவர்கள் திரும்பவில்லை என்றால் சம்பந்தப்பட்டவர்களின் வாக்குகள் இழப்பு ஓட்டாக மாறிவிடும்.
இதன் காரணமாகவே முதல் முறையாக பீகார் தேர்தலில், நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் வாக்களிக்கும் முறையை செயல்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது. இதற்கான பரிந்துரைகளை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளது.அவ்வாறு  பரிந்துரைகளை நவ.,3-ந்தேதி வரை வழங்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் இதில் சிறந்த 10 பரிந்துரைகள் நடுவர் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் மிகவும் நடைமுறை சாத்தியம் உள்ள 3 பரிந்துரைகளுக்கு பணப்பரிசு வழங்கப்படும் என்றும் சிறந்த பரிந்துரையை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இவைகளை பீகார் தேர்தலுக்கு பின்பற்ற தேர்தல் கமிஷன் அமல்படுத்தும்  பட்சத்தில்  நாட்டில் எந்த பகுதியில் இருந்தும் பீகார் தேர்தலில் ஓட்டளிக்க அந்த மாநில வாக்காளர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.ஆனால் இந்த திட்டத்தை செயல்படுத்த நேரக்குறைவு போன்ற தடங்கல்கள் ஏற்பட்டால், அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்க உள்ள மே.வ தேர்தலில் அமல்படுத்தப்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Rajat Patidar fined
Governor RN Ravi - Supreme court of India - TN CM MK Stalin
AA22xA6
mk stalin - RN RAVI
TVK Leader Vijay