பிரச்சாரத்தில் பழம்-இளம் தலைவர்களோடு களமிரங்கும் சோனியா..பிரச்சார பட்டியல் வெளியீடு-பீகார் பராக் பராக்!

Default Image

காங்., நட்சத்திரப் பேச்சாளர்களாக களமிரங்கும் பிரச்சாரப் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் அக்.,28 முதல் நவ.,7 வரை 3 கட்டமாக  சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் ஆளும்  தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து தேஜஸ்வி யாதவ் தலைமையில் மஹாகட்பந்தன் கூட்டணி மோதுகிறது. 243 இடங்களை கொண்ட பீகார் சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை  நிதீஷ் குமார்  தலைமையிலான ஐக்கிய ஜனாத தளம், லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம், பாஜக, காங்கிரஸ் ஆகியவை பீகார் அரசியலில் முக்கிய கட்சிகள்.

இந்நிலையில் பீகார்சட்டசபைத் தேர்தலில் நெருங்குவதால் காங்கிரஸ் கட்சி பிரசாரம் மேற்கொள்ளும் நட்சத்திரப் பேச்சாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பெயர் இடம்பெற்றுள்ளனர். அவ்வாறு காங்.,வெளியிட்டுள்ள 30 பேர் அடங்கிய இந்த பட்டியலானது தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்டது.இதில் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

இவர்கள் மட்டுமின்றி ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட், பஞ்சாப் முதல்-மந்திரி அமரீந்தர் சிங், சட்டீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகெல், குலாம் நபி ஆசாத், தாரிக் அன்வர் ஆகியோர்களும் இடம்பெற்றுள்ளனர்.

3 கட்டங்களாக நடைபெற  வாக்குப்பதிவில், ராகுல்காந்தி 2 பொதுக் கூட்டங்கள் என்று மொத்தம் 6 பொதுக் கூட்டங்களில் பங்கேற்று தனது பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
mk stalin - RN RAVI
TVK Leader Vijay
Supreme court of India - TN Governor RN Ravi
Pawan Kalyan
US President - China President
murder