ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7.50 லட்சத்தை கடந்தது!

ஆந்திராவில் கொரோனா தொற்றால் மேலும் 5,653 பேர் பாதிக்கப்பட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைய தொடங்கியது. அந்தவகையில் இன்று ஒரே நாளில் 5,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,50,517 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மேலும் 35 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 6,194 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 6,659 பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பிய நிலையில், 6,97,699 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். அதுமட்டுமின்றி 46,624 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.