தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம்- தமிழக அரசு உத்தரவு..!
தமிழகத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் சண்முகம் பிறப்பித்துள்ளார். அதன்படி, டாஸ்மாக் மேலாண் இயக்குநராக மோகன் நியமனம், வெங்கடேஷ் பள்ளிக் கல்வித்துறை ஆணையராக நியமனம், குடிசை மாற்று வாரிய மேலாண் இயக்குநராக கிர்லோஷ் குமார் நியமனம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் செயல் அலுவலராக கிராந்தி குமார் நியமனம், தமிழ்நாடு தொழிற்சாலைகள் முதலீட்டு கழகத்தின் மேலாண் இயக்குநராக சிஜி தாமஸ் வைத்யன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.