கேரளாவில் இன்று புதிய உச்சமாக 11,755 பேருக்கு கொரோனா உறுதி.!

கேரளாவில் இன்று 11,000 மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கேரள மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 11,755 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 2,79,855 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, இன்று கொரோனாவிலிருந்து 7,570 பேர் குணமடைந்தனர்.
இதனால், இதுவரை 1,82,874 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், கொரோனா பாதிப்பால் 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 978 பேர் ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து, மருத்துவமனையில் 95,918 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என கேரள சுகாதார துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
உறுதியானது அதிமுக – பாஜக கூட்டணி! அமித்ஷா அறிவிப்பு!
April 11, 2025
தமிழ்நாடு பாஜகவின் 13வது தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்!
April 11, 2025