ரூ 26.85 கோடி மதிப்பீட்டில் பழவேற்காடு ஏரியின் முகத்துவாரத்தை தூர்வாரி சீரமைத்தல் – ஜெயக்குமார்

ரூபாய் 26.85 கோடி மதிப்பீட்டில் ஏரியின் முகத்துவாரத்தை தூர்வாரி சீரமைத்தல்.

பழவேற்காடு ஏரியின் முகத்துவாரத்தை தூர்வாரி சீரமைத்து நேர்கல் சுவர்களுடன் நிரந்தரமாக நிலைப்படுத்தியுள்ளோம் என அதிமுக மீன்வளதுறை அமைச்சர் ஜெயக்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு ஏரியில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் மணல்திட்டுக்கள் ஏற்பட்டு முகத்துவாரம் அடைப்பட்டுவிடுகிறது எனவும் இதனால் இப்பகுதி மீனவர்கள் வங்கக் கடலில் சென்று தொழில் செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது.

இதனால், இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக ஏரியின் முகத்துவாரத்தினை தூர்வாரி, நேர்கல் சுவர்கள் மூலம் நிலைப்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மீனவர்கள் கோரி வருகிறார்கள்.

இந்நிலையில், அவர்களது கோரிக்கையின் அடிப்படையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் 2020-21 ஆம் நிதியாண்டில் விதி எண் 110-ன் கீழ் திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு கிராமத்தில் ரூ.26.85 கோடி மதிப்பீட்டில் பழவேற்காடு ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தி நேர்கல் சுவர்கள் அமைத்து நிரந்தரமாக நிலைப்படுத்தப்படும் என அறிவிப்பு செய்தார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.