மதிமுக தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் – வைகோ

Default Image

மதிமுக தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும் என்று வைகோ தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றன.குறிப்பாக கூட்டணி தொடர்பான பேச்சுக்கள் விறுவிறுப்பாக நடைபெற தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த முறை நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளும் தங்களது கூட்டணியில் உள்ள ஒரு சில கட்சிகளை இரட்டை இலை  மற்றும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று அறிவுறுத்திய நிலையில் கூட்டணி கட்சிகளும் அதன்படி போட்டியிட்டன.ஆனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஒரு சில கட்சிகள் தனிச்சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வருகின்றன.

அந்த வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,நான் பதவிகளுக்காக வாழவில்லை, லட்சியத்திற்காக வாழ்கிறேன் என்பது லட்சக்கணக்கான என் தொண்டர்களுக்கு தெரியும். என்னை பற்றி ஒரு சில பத்திரிகைகள் நஞ்சை கக்குகின்றன .அதில் எழுதப்பட்டதில் எள்ளளவும் உண்மையில்லை . திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக நீடிக்கும். இருந்தபோதிலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தனித்தன்மையோடு தனி சின்னத்தை பெற்று தேர்தலை சந்திக்கும். வருகின்ற தேர்தல் அதிமுகவிற்கு மரண அடியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட ஒத்துக்கொண்டதாக வெளியான தகவலுக்கு தற்போது  வைகோ மறுப்பு தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்