டெண்டர் ரத்து.. அதிமுக அரசுக்கு சம்மட்டி அடி.. மு.க.ஸ்டாலின்..!

ஊராட்சி மன்றங்களின் அனுமதி இன்றி விடப்பட்ட டெண்டர்கள் ரத்து- சென்னை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு ஊழல் திருவிளையாடல் நடத்தும் பழனிச்சாமி அரசுக்கு சம்மட்டி அடி! இ-டெண்டரை இத்தோடு மூட்டை கட்டுங்கள்.!
-ன் ஊழலுக்கு துணைபோகும் அதிகாரிகளும் தப்ப முடியாது! எச்சரிக்கை! என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதில், ஊராட்சி மன்றங்களின் அனுமதி இல்லாமல் கிராமச்சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு விடப்பட்டுள்ள அதிமுக அரசின் திட்டங்களை ரத்து செய்திருக்கிறது, சென்னை உயர்நீதிமன்றம் மனதார வரவேற்கிறேன். தெருவிளக்கு தொடங்கி குடி தண்ணீர் குழாய்கள் அமைப்பது வரை அனைத்து அதிகாரிகளையும் அபகரித்துக் கொள்ள நினைக்கிறது. அதிமுக அரசு 2300 கோடி ரூபாய் நிதியிலும் ஊழலுக்கு திட்டமிட்டது.
ஊராட்சி மன்றங்களை சுதந்திரமாக இயங்க அனுமதிக்க வேண்டும் என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றங்கள் தான் 14 ஆவது நிதிக்குழு நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்று தீர்ப்பில் அறுதியிட்டு கூறப்பட்டுள்ளது. உள்ளாட்சித் துறையில் டெண்டர்களை விட்டு கொள்ளையோ கொள்ளை என அடித்து கஜானாவை காலி செய்து கொண்டிருக்கும் உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு எஸ். பி வேலுமணி மத்திய நிதி குழு அளிக்கும் ஊராட்சி நிதியில் ஊழல் திருவிளையாடல் நடத்துவதற்கு படம் கட்டணங்கள்.
14வது நிதிக்குழுவின் நிதியில் சாலை மேம்பாட்டு பணிகளாக இருந்தாலும் சரி, ஜல் ஜீவன் மிஷன் திட்டு பணிகளாக இருந்தாலும் சரி உள்ளாட்சி மன்றங்களுக்கே ஒதுக்கிட வேண்டும். உள்ளாட்சித்துறை அமைச்சரின் ஊழல்களுக்கு துணை போகும் நோக்கில்- ஊராட்சி மன்றங்களின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் வழிகாட்டுதல் வழங்கிய ஊரக வளர்ச்சித் துறை அரசுச்செயலாளர், ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர், உங்களுக்கு துணை போகும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் யாரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.