#Delhi corona: இன்று 3,370 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டனர்.!
டெல்லியில் இன்று 2,860 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,03,693 ஆக அதிகரித்துள்ளது. அந்த வகையில், இன்று 3,370 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,76,046 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது, 21,955 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று 39 பேர் உயிரிழந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,692 ஆக உயர்ந்துள்ளது.