முதல்வரை சந்தித்தது ஏன்? – எல்.முருகன் விளக்கம்..!
சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சந்தித்தார். அதிமுக – பாஜக கூட்டணி குறித்து முரண்பாடான கருத்து வெளியாகி வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற இருப்பதாகவும், இந்த சந்திப்பில் பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டிராகவனும் இருந்தார் என கூறப்பட்டது.
இந்நிலையில், முதல்வருடன் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எல்.முருகன், வேளாண் பாதுகாப்பு சட்டத்தை வரவேற்ற முதல்வருக்கு நன்றி தெரிவித்தேன், அதிமுக முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டதற்கும் வாழ்த்து தெரிவித்தேன் என கூறினார்.