#heavyRain: 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம்
16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாளை முதல் அடுத்த 2 நாட்களுக்கு குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், திருவள்ளூர், தருமபுரி, வேலூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, கடலூர், தேனீ உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.