CSK வீரர்களை கடுமையாக விமர்சித்த சேவாக்…!

Default Image

சென்னை அணியின் வீரர்கள் , தங்கள் அணியை ஒரு அரசாங்க வேலையாகவும், சரியாக விளையாடவிட்டாலும், சம்பளம் கிடைக்கும் என்ற நோக்குடன் ஆடுவதாக சேவாக் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதவுள்ள நிலையில், நேற்று முன்தினம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதிய போட்டியில் படுதோல்வியை சந்தித்தது.

கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கேதர் ஜாதவின் சொதப்பலான ஆட்டத்தால் சென்னை அணி தோல்வியை சந்தித்தது. இதன்காரணமாக ஜாதவ் மீது சமூக வலைத்தளத்தில் பலரும் விமர்சிக்க தொடங்கினார்கள்.

இந்தநிலையில், கிரிக்பஸ் (CRICBUZZ) ஊடகத்திற்கு பேட்டியளித்த இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் இது குறித்து கூறுகையில், ” என் பார்வையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சில பேட்ஸ்மேன்கள் சென்னை அணியை ஒரு அரசாங்க வேலையாக நினைக்கிறார்கள். சரியாக விளையாடவிட்டாலும், தங்கள் சம்பளத்தைப் பெற்றுவிடுவார்கள் என நினைக்கிறார்கள்.

சென்னை அணிக்கு 167 ரன்கள் தேவைப்பட்டது. தொடக்கத்தில் ஷேன் வாட்சன் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார். அதைபோல் சிறப்பாக விளையாடி வந்திருக்க வேண்டும், ஆனால் கேதர் ஜாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆடிய டாட் பந்துகள், அணியின் வெற்றிக்கு கைகொடுக்க வில்லை” என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்