நான் அவரைப் போல ஆக வேண்டும் என்பது எனது கனவு – சச்சின்..!

Default Image

சச்சின் டெண்டுல்கர் சுனில் கவாஸ்கர் மற்றும் ரிச்சர்ட்ஸ் தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்கள் என்று கூறியுள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களை பற்றி கூறியுள்ளார். அதில் சச்சின்கூறியதாவது, தனக்குப் பிடித்த பேட்ஸ்மேன்கள் என்றால் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் விவியன் ரிச்சர்ட்ஸ் என்று கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து பேசிய சச்சின் என்னுடைய நிஜ வாழ்க்கையில் ஹிரோ என்றால் என்னுடைய தந்தை ரமேஷ் டெண்டுல்கர் தான். ஏனென்றால் எனது தந்தையிடம் இருந்து நான் பல நற்குணங்களை காத்துக் கொண்டுள்ளேன் நல்ல குணங்கள் மற்றும் பொறுமையாக இருப்பது போன்ற பலவற்றை கற்றுள்ளேன்.

எனது தந்தை லேசானவர், மிகவும் அமைதியானவர், மிகவும் ஒரு இயல்புடைய மனிதர். எனவே, நான் அவரைப் போல ஆக வேண்டும் என்பது எனது கனவு. என் வாழ்க்கையில் என் தந்தை என் ஹீரோ என்று நான் கூறுவேன், என்றும்  கூறியுள்ளார்.

 

எனது இளம் வயதில் நான் கிரிக்கெட் விளையாட விரும்பும் பொழுது எனக்கு சுனில் கவாஸ்கர் மற்றும் ரிச்சர்ட்ஸ் இரண்டு வீரர்கள் எனது ஹீரோவாக இருந்தார்கள். சுனில் கவாஸ்கர் இந்திய அணிக்காக பல சாதனைகளை செய்துள்ளார். என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்