போலி ஆவணங்களை வைத்து ரூ.2.70 கோடி மோசடி – விஷ்ணு விஷால் தந்தை மீது சூரி புகார்!

Default Image

போலி ஆவணங்களை வைத்து ரூ.2.70 கோடி மோசடி செய்துவிட்டதாக  விஷ்ணு விஷால் தந்தை மீது நடிகர் சூரி புகார் அளித்துள்ளார்.

நடிகர் சூரியுடன் நடிகர் விஷ்ணு விஷால் வீர தீர சூரன் எனும் தமிழ் படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் இருவரும் நட்பிலிருந்து வந்தனர். இந்நிலையில் விஷாலின் தந்தை அந்நேரத்தில் டிஜிபியாக இருந்ததால் அவரது தந்தை ரமேஷ் குடவாலாவை சூரிக்கு விஷ்ணு விஷால் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதனையடுத்து நிலம் வாங்க வேண்டுமென சூரி ரமேஷிடம் கேட்டதால் சிறுசேரியில் உள்ள ஒரு நிலத்தை வாங்கி தருவதாக 3 கோடியே 10 லட்சம் ரூபாயை விஷ்ணு விஷாலின் தந்தை கேட்டு பெற்றுள்ளார். இந்நிலையில் அந்த நிலத்தின் மதிப்பு அவர் வாங்கிய 3 கோடியே 10 லட்சத்தை விட மிக கம்மி எனவும், நிலத்தின் மதிப்பை கூட்டி போலி ஆவணம் தயாரித்து தன்னிடம் விற்றதும் தற்பொழுது புரோட்டா சூரி அவர்களுக்கு தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அந்த நிலமும் தற்போது வில்லங்கமான இடமாக இருப்பதால் அதை மீண்டும் அவரிடமே ஒப்படைத்துள்ளார். இருப்பினும் ரமேஷ் சூரியிடம் பணத்தை கொடுக்காமல் இருந்ததால் , காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர் முன்னாள் டிஜிபி என்பதால் ரமேஷ் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. எனவே தனது பணத்தை மோசடி செய்துள்ளதாக, ரமேஷ் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் அன்பு வேல்ராஜன் மீதும் சேர்த்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சூரி மனு அளித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த குற்றவியல் போலீசார் இதனடிப்படையில் ரமேஷ்  மற்றும் அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து பதிலளித்துள்ள நடிகர் விஷ்ணு விஷால் என் மீதும், தந்தை மீதும் வைக்கப்பட்டுள்ள பொய்யான குற்றசாட்டுகள் அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது எனவும், சட்டப்படி அவற்றை எதிர்கொள்வோம் எனவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்