ராம் விலாஸ் பஸ்வானின் உடலுக்கு அமித் ஷா நேரில் அஞ்சலி

மத்திய அமைச்சர் அமித் ஷா ,மறைந்த ராம் விலாஸ் பஸ்வானின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் (74) கடந்த சில வாரங்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதனை தொடர்ந்து கடந்த 3-ஆம் தேதி அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது.இதனிடையே நேற்று ராம்விலாஸ் பஸ்வான் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராம் விலாஸ் பஸ்வான் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.டெல்லி ஜன்பாத்திலுள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது.இதனால் பலரும் நேரில் அஞ்சலி செலுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷா ,மறைந்த ராம் விலாஸ் பஸ்வானின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.ஏற்கனவே பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025