காதல் திருமணம் விவகாரம்: கணவருடன் செல்ல சவுந்தர்யாவுக்கு அனுமதி.!
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவுடன் செல்ல மனைவி சவுந்தர்யாவுக்கு அனுமதி தந்தது உயர்நீதிமன்றம்.
தந்தையுடன் பேசிய பிறகு கணவருடன் செல்வதாக சவுந்தர்யா விருப்பம் தெரிவித்ததால் நீதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளனர். சவுந்தர்யா தந்தை சுவாமிநாதன் தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் முடித்துவைத்தனர். முழு மனதுடன் எம்.எல்.ஏவை திருமணம் செய்திருப்பதாகவும் தம்மை யாரும் கட்டாயப்படுத்தவில்லை எனவும் சவுந்தர்யா வாக்குமூலம் அளித்துள்ளார்.
19 வயது நிரம்பாத சவுந்தர்யாவை கடத்தி பிரபு திருமணம் செய்ததாக தந்தை சுவாமிநாதன் வழக்கு தொடர்ந்திருந்தார். சுவாமிநாதன் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சவுந்தர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் எம்.எல்.ஏ பிரபு என்பது குறிப்பிடத்தக்கது.