உலக அளவில் கொரோனா பாதிப்பு 3 கோடியே 67 லட்சத்தை கடந்தது!

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோர் விபரம். 

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளானது. இந்த வைரஸை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், உலகளவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3 கோடியே 67 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இந்த வைரஸால் 1,066,856 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 27,667,693 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.