சுப்ரீம் கோட் சறுக்கி வருகிறது..தீர்ப்பை மீண்டும் விமர்சிக்கும் பூஷன்?அடுத்த சிக்கல்

Default Image

உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பிரசாந்த் பூஷன், மீண்டும் போராட்டம் பற்றிய நீதிபதியின் தீர்ப்புக்கு சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்துள்ளார்.

தலைநகர் புதுதில்லியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞராக வலம் வருபவர் பிரசாந்த் பூஷன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, முன்னாள் தலைமை நீதிபதிகளை விமர்சித்ததாக அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டார்.அதில் அவருக்கு தண்டனையாக ரூ.1யை அபராதமாக உச்ச நீதிமன்றம் செலுத்த சமீபத்தில் உத்தரவிட்டது.

latest tamil news
இந்நிலையில் கடந்த புதன்கிழமை பொது இடங்களில் போராட்டம் நடத்துவது குறித்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சாலைகள் போன்ற இடங்களில் கூடி போராட்டம் நடத்த சட்டப்படி அனுமதி கிடையாது. மேஉம் இது போன்ற போராட்டங்கள் நடக்கும்போது, நீதிமன்றங்களின் உத்தரவுக்காக காத்திருக்காமல், போராட்டங்களை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று அதிரடி தீர்ப்பளித்தது.

நீதிபதியின் இத்தீர்ப்பினை விமர்சித்துள்ளார் பிரசாந்த் பூஷன்.இது குறித்து அவர் தனது  பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: மும்பை ஐகோர்ட், ரியா சக்ரபார்த்திக்கு ஜாமீன் வழங்கும்போது போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறையினரை கண்டித்தது. அதே நாளில் சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், போலீசாரால் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் கூட போராடும் உரிமையை கட்டுப்படுத்தி உள்ளது. சுதந்திரத்தில் சுப்ரீம் கோர்ட் தொடர்ந்து சறுக்கி வருகிறது. அதேசமயம் ஐகோர்ட்டுகள் நீதியின் கொடியை உயர்த்திப் பிடிப்பதாக கூறியுள்ளார்.


	

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்