18வது மற்றும் 8வது நாளில் பெட்ரோல்-டீசல்..விலை நிலவரம் இதோ!
தமிழகத்தில், இன்று (அக்09), பெட்ரோல் ,டீசல் இன்றைய நிலவரம் குறித்து காண்போம்.
பொதுத் தறையை எண்ணெய்நிறுவனங்களான, இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 84.14 ரூபாய், டீசல் லிட்டர் 75.95 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல் விலை 18வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை. 8வது நாளாக டீசல் விலையிலும் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.