சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை உடைய அரசு ஊழியர்களுக்கு 6 நாட்கள் விடுப்பு….
சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை கொண்ட அரசு ஊழியர்களுக்கு 6 நாட்கள் சாதாரண விடுப்பு எடுக்க அனுமதி அளித்து தற்போது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதத்தில் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை மானியக்கோரிக்கையின் போது மீன்வளம் மற்றும் பணியாளர் துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை கொண்ட அரசு ஊழியர்கள் அக்குழந்தைகளின் நலன்களை பராமரிக்க மேற்கொள்ளும் சிரமத்தை குறைக்கும் நோக்கத்தோடு அத்தகைய குழந்தைகளின் பெற்றோர்களான அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 6 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்பேரில் தற்போது இதற்கான அரசாணையை பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் ஸ்வர்ணா அவர்கள் வெளியிட்டு உத்தரவிட்டுள்ளார். அதில், சிறப்பு குறைபாடு கொண்ட குழந்தைகளை வைத்திருக்கும் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 6 நாட்கள் விடுப்பு எடுத்து கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.