மின் கணக்கீட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு.. சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி!

Default Image

மின் கணக்கீட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் முதல் ஜூன் மாதம் வரை மின் கணக்கீடு எடுக்காத நிலையில், தற்பொழுது ஒட்டுமொத்தமாக மின் கணக்கீடு எடுக்கப்பட்டு, அதற்கான மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

இதனால் மக்கள் பலரும் அதிருப்தி அடைந்த நிலையில், இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையின் போது, மின் கணக்கீடு முறையில் எந்த விதி மீறல் இல்லை என இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், மின் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ள காரணத்தினால் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், இந்த மனுவை தள்ளுபடி செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Tamilnadu CM MK Stalin - TN Budget 2025 Rupees symbol
world cup 2027
TN Budget - TN Govt
train hijack pakistan
DMK - Revanth Reddy
udhayanidhi stalin annamalai