முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.399.93 கோடி நிதி

Default Image

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு  ரூ.399.93 கோடி  நிதி பெறப்பட்டுளளது.

கொரோனா வைரஸ் அதிகமாவதை தடுக்க தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களிடம் நிதியுதவி கேட்டுக்கொண்டது.இதற்காக பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பு பணிக்காக விருப்பம் உள்ளவர்களை நிதி அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.அதன்படி பல்வேறு தரப்பினரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா நிவாரண நிதிக்கு நிறுவனங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு  7.10.2020 வரை பெறப்பட்ட மொத்த தொகை 399 கோடியே 93 லட்சத்து 3 ஆயிரத்து 366 ரூபாய்  ஆகும் .நன்கொடையளித்தவர்களுக்கு தனித்தனியே ரசீது வழங்கப்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்