ஏரியில் குளிக்க சென்ற குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
திண்டிவனம் ஏரியில் குளிக்க சென்ற குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
தற்போது தமிழகம் முழுவதிலும் சில இடங்களில் மழை பெய்து வருவதால் ஆறுகள் ஏரிகள் எல்லாம் நிரம்பி வழிகின்றன. எனவே இத்தனை நாட்களாக கொரோனா ஊரடங்கால் வீட்டுக்குள்ளேயே இருந்த மக்கள் தங்கள் ஊர் அருகே இருக்கக்கூடிய குளங்கள் ஏரிகளில் சென்று குளிப்பதனை வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது திண்டிவனம் அருகே உள்ள கிராமத்தில் உள்ள ஒரு ஏரியில் குளிக்க நான்கு வயதான தேவேஷ் எனும் சிறுவனும் லதா எனும் 11 வயது சிறுமியும் சென்றுள்ளனர்.
ஆனால் ஏரியில் குளித்துக் கொண்டிருந்த போது அங்கு நீர் அதிகமாக இருந்ததால் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். குழந்தைகளைக் காணவில்லை என தேடிப் குளிக்க சென்ற இடத்தில் பார்க்கும்போது குழந்தைகள் சடலம் இருந்துள்ளது. இந்நிலையில் சடலத்தை போலீஸார் உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர்.