ஸ்வப்னாவை நியமனம் செய்தது முதல்வருக்கு தெரியும்.. அமலாக்கத்துறை..!
கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி கேரளாவில் உள்ள திருவனந்தபுர விமான நிலையத்தில் 30 கிலோ கடத்தல் தங்கம் சுங்கத்துறையால் கைப்பற்றப்பட்டது. இந்த தங்கம், அங்குள்ள ஐக்கிய அரபு அமீரக துணை தூதரகத்தின் பெயரால் கடத்தப்பட்டது தெரிய வந்தது.
இது தொடர்பாக அந்த துணை தூதரகத்தில் வேலை செய்த ஸ்வப்னா சுரேஷ் முக்கிய பங்கு இருந்தது தெரியவந்தது. இந்த தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சரித்குமார், சந்தீப் நாயர் உட்பட 6 பேர் ஜாமீன் கோரி எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், ஸ்வப்னா சுரேஷ், சரித்குமார், சந்தீப் நாயர் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை நேற்று தனது முதல் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில் இவர்கள் 3 பேரும் ஹவாலா பணம் சேகரிப்பதில் பங்குகொண்டு இவர்களுக்கு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்வப்னாவிற்கும், ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. சிவசங்கரியின் சிபாரிசில் தான் கேரளா அரசின் விண் வெளிபூங்கா திட்டத்தில் பணி வழங்கப்பட்டுள்ளது. இது முதலமைச்சர் பினராய் விஜயனுக்கு தெரிந்தே தான் பதவி வழங்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.