பதவியை ராஜினாமா செய்த பபிதா போகத்..!
மூத்த மகளிர் மல்யுத்த வீரர் பபிதா போகாட் நேற்று ஹரியானா மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை துணை இயக்குநர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த ஆண்டு ஜூலை 30 அன்று அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார். இந்த ஆண்டு மாநில விளையாட்டுத் துறையில் துணை இயக்குநர்களாக பபிதா மற்றும் கபடி வீரர் கவிதா தேவி நியமிக்கப்பட்டனர்.
பீகாரில் சட்டமன்றத் தேர்தல்களைத் தவிர, பரோடா சட்டமன்ற இடைத்தேர்தலில்தீவிரமாக பிரச்சாரம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். 2014 காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான பபிதா கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தாத்ரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.