“முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ்.. நம்பிக்கையான அறிவிப்பு!” – ஜி.கே.வாசன்

“முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ்! நம்பிக்கையான அறிவிப்பு” என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் 50 நாட்களாக ஏற்பட்ட குழப்பம், இன்று முடிவுக்கு வந்துள்ளது. அந்த வகையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஈபிஎஸ் – ஓபிஎஸ், 2021-ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அவர்களை அதிகாரபூர்வமாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், அவர்களுக்கு பல தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், “முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ்! நம்பிக்கையான அறிவிப்பு” என தனது கருத்தை தெரிவித்துள்ளார்.