துணை முதலமைச்சர் இன்று மாலை முதல்வரை சந்திக்கவுள்ளார்..!

Default Image

அதிமுக தலைமையகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, முதல்வர் வேட்பாளர் மற்றும் கட்சி வழிகாட்டுதல் குழுவில் இடம் பெற்றவர்களின் பெயர் அறிவிக்கப்பட்டது.

11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் இடம் பெற்றவர்களின் பெயரை முதல்வர் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்தார்.

இந்நிலையில், துணை முதலமைச்சர் , முதல்வரை  இன்று மாலை சந்திக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, துணை முதலமைச்சர் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி  அறிவிக்கப்பட்ட நிலையில் சந்திப்பு நடைபெறுகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்