#BREAKING: சுஷாந்த் சிங் காதலி ரியாவிற்கு ஜாமீன்..!
பாலிவுட் நடிகை மற்றும் சுஷாந்த் சிங் ராஜ்புத் காதலி ரியாவிற்கு ஜாமீன் வழங்கியது மும்பை உயர்நீதிமன்றம்.
ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது தம்பி சோவிக், நடிகர் சுஷாந்த் சிங் வீட்டின் மேலாளர் சாமுவேல் மிரண்டா உள்ளிட்ட 8 பேர் மும்பையில் செப்டம்பர் 8 -ஆம் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து, நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்றுடன் ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது சகோதரர் சோவிக் ஆகியோரின் நீதிமன்றக்காவல் முடிந்த நிலையில், மேலும், நீதிமன்றக் காவல் வரும் 20- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இவர்கள் இருவரை தவிர போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட 18 பேரின் நீதிமன்றக்காவலை வருகின்ற 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு நடிகர் ரியாவிற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சுஷாந்த் சிங் ஊழியர்களான தீபேஷ் சாவந்த், சாமுவேல் மிராண்டா ஆகியோருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், ரியாவின் சகோதரர் ஷோயிக் ஜாமீன் மனு மறுக்கப்பட்டுள்ளார். நேற்று நீதிமன்றம் அவர்களின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 20 வரை நீட்டித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ரியா சக்ரவர்த்தி ₹ 1 லட்சம் பத்திரமாக சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு, விடுவிக்கப்பட்ட 10 நாட்களுக்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் தினமும் ஆஜராக வேண்டும்.
அவர் தனது பாஸ்போர்ட்டையும் ஒப்படைக்க வேண்டும், நீதிமன்றத்தின் அனுமதியின்றி வெளிநாடு செல்லக்கூடாது எனவும், மும்பையை விட்டு வெளியேற வேண்டுமானால் விசாரணை அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.