ஒரே நாளில் உலகளவில் 3.11 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு – மொத்த பாதிப்பு எவ்வளவு தெரியுமா?
ஒரே நாளில் உலகளவில் கொரோனா பாதிப்பு 3.11 லட்சத்தை கடந்துள்ளது.
நாளுக்கு நாள் தங்க விலை போல அதிகரித்துக்கொண்டே செல்லும் கொரோனா வைரஸ் தாக்கம் உலக அளவில் இன்னும் குறைந்தபாடில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகளவில் புதிதாக கொரோனா வைரஸால் 311,613 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரே நாளில் 5,553 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உலகம் முழுவதிலும் 36,033,001 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
1,054,057 பேர் உயிரிழந்துள்ளனர், தற்பொழுது மருத்துவமனைகளில் 7,838,911 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மக்களின் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்த நிலை மாற வேண்டுமானால், ஒவ்வொரு தனிமனிதனும் சமூக இடைவெளிகளை கடைபிடித்து, முக கவசம் அணிந்து வெளியில் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.