டிரம்ப் கூறுவது சரியல்ல – ஜோ பைடன் விமர்சனம்

Default Image

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் முக கவசம் அவசியம் இல்லை,  சமூக இடைவெளி அவசியம் இல்லை என கூறுவது சரியல்ல என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 2- ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது  மனைவி மெலனியா டிரம்ப்க்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டனர். மேலும் அதிபர் டிரம்ப், சிகிச்சைக்காக வாஷிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு  சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் அவருக்கு குணமடைந்தது.இதனால் அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். அப்பொழுது  அவர், தான் அணிந்திருந்த முகக்கவசத்தை கழற்றி, தனது ஆதவர்களிடையே கையசைத்தார்.மக்கள் அனைவரும் கொரோனா வைரஸைக் கண்டு அச்சப்பட வேண்டாம்  என்றும் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காதீர்கள் என்று கூறினார் .மேலும் முகக்கவசத்தை கழற்றிய அதிபர் டிரம்பின் செயல், தற்பொழுது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

இதனிடையே அமெரிக்காவில் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார். துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இவர்களின் கூட்டணியை அமெரிக்க அதிபர் டிரம்ப், தொடர்ந்து விமர்சித்து கொண்டே வருகிறார்.அதேபோல் ஜோ பைடனும் டிரம்பை விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் டிரம்ப் குறித்து ஜோ பைடன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் முக கவசம் அவசியம் இல்லை,  சமூக இடைவெளி அவசியம் இல்லை என கூறுவது சரியல்ல.எனவே டிரம்ப் மக்களுக்கு, கொரோனா தொடர்பான சரியான பாடத்தை எடுக்க வேண்டும் என்றும் கொரோனா குறித்து தவறாக டிரம்ப் பேசி  வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்