நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம்..! மாப்பிள்ளை இவர் தான்…!
நடிகை காஜல் அகர்வால் தமிழில் நான் மகான் அல்ல துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகுராஜா, மாரி, கோமாளி போன்ற பல படங்களில் நடித்து மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தற்பொழுதுசில படங்களில் கமிட் ஆகியுள்ளார். உதாரணமாக இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனிற்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது 35 வயதான காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் முடிக்க பெற்றோர் முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகிய நிலையில்தற்பொழுது அந்த தகவல் உறுதியாகியுள்ளது.
ஆம் அவர் ஒரு தொழிலதிபரை காதலிப்பதாகவும் ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் 2020 அக்டோபர் 30 அன்று மும்பையில், எங்கள் குடும்பத்தினர் முன்னிலையில் கிட்ச்லுவை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்பதைப் தெரிவிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. என்று குறிப்பிட்டுள்ளார்.
— Kajal Aggarwal (@MsKajalAggarwal) October 6, 2020