திறக்கப்படுகிறதா..?பள்ளிகள்- இன்று முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பு, பொதுத் தோ்வுகளைத் தள்ளி வைப்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுடன் இன்று (செவ்வாய்க்கிழமை)ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் எனத் தெரியாத சூழல் நிலவுகிறது. இந்நிலையில் இம்மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று உறுதியாகியது.இந்நிலையில் அடுத்த மாதம் பத்தாம் வகுப்பு முதல் + 2 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு மட்டும் வகுப்புகளைத் தொடங்குவது, பொதுத்தோ்வுகளை ஒத்திவைப்பது போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து துறைச் செயலா், இயக்குநா்களுடன் அமைச்சா் செங்கோட்டையன் சென்னையில் திங்கள்கிழமை ஆலோசனை நடத்திய நிலையில் இன்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்  காலை 9.30 மணிக்கு நடக்க உள்ளது.இக்கூட்டத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாகவும்,மேலும்  மாணவா்களுக்கு சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற போதுமான இடவசதிகள், பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்வதில் உள்ள பிரச்னைகள் போன்றவைகள் ஆலோசிக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனா்.



author avatar
kavitha