சர்தாமிற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நிர்ணயம் – தேவஸ்தானம் அறிவிப்பு

Default Image

உத்தரகண்ட் மாநிலத்தின் சார்தாமிற்கு கொரோனா வைரஸ் தொற்றுநோயால் வருகை தருபவர்களின் எண்ணிக்கை நிர்ணயக்கப்பட்டுள்ளது. இமயமலை ஆலயங்களுக்கு அதிகமான பக்தர்களை பார்வையிட அனுமதிக்கபடுள்ளதால், கோயில்களின் விவகாரங்களை நிர்வகிக்கும் உத்தரகண்ட் சர்தாம் தேவஸ்தானம் வாரியம் நேற்று வருகையை எளிதாக்கும் முடிவை எடுத்தது.

இந்நிலையில், கொரோனா நெகடிவ் அறிக்கையை கொண்டுவருவதற்கான கட்டாயத் தேவை நீக்கப்பட்டதிலிருந்து, கோவில்களைப் பார்வையிட இ- பாஸ்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்று வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரவீநாத் ராமன் தெரிவித்தார்.

தற்போது, சர்தாமிற்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கையின் தினசரி வரம்பு கேதார்நாத்துக்கு 800, பத்ரிநாத் 1,200, கங்கோத்ரிக்கு 600 மற்றும் யமுனோத்ரிக்கு 400 என அவர் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்