பிக்பாஸ் 4வது சீசனில் பங்கேற்ற பிரபலங்கள் யார் யார் தெரியுமா..?

Default Image

பிக்பாஸ் தமிழில் 4வது சீசன் நேற்று மாலை 6 மணிக்கு சிறப்பாக தொடங்கியது. அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் பங்கேற்று உள்ளனர். கொரானா வைரஸ் பரவல் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல் பேசும் பொழுது மக்கள் பார்க்க இருக்க மாட்டார்கள்.

வீடியோகால் மூலம் டிஜிட்டலாக பிக்பாஸ் பார்க்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆம் பிக்பாஸ் வீட்டுக்குள் பெரிய திரையில் மக்கள் முகம் தெரியும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த போட்டியில் பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

முதலாவதாக பங்கேற்றவர் ரியோ ராஜ், தனியார் தொலைக்காட்சிகளில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் அதனைத் தொடர்ந்து சில படங்களிலும் நடித்துள்ளார். இரண்டாவதாக சனம் செட்டி சில படங்களில் நடித்துள்ளார். மேலும் பிக் பாஸ் சீசன் 3ல் களமிறங்கிய தர்ஷன் முன்னாள் காதலி என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

அடுத்ததாக தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக இருந்த  ரேகா இந்த பிக் பாஸ் 4 வது சீசனில் களமிறங்கியுள்ளார். மேலும் பாலாஜி முருகதாஸ், மற்றும்  தனியார் தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக  அறிமுகமாகி பிரபலமான அனிதா சம்பத். மற்றும் முன்னணி நடிகர் சித்தன் ரமேஷ் மற்றும் தனியார் தொலைக்காட்சி நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ஷிவானி நாராயணன்.

மற்றும் பாடகர் வேல்முருகன், மற்றும் ஆல்பம் பாடல்கள் போன்றவற்றில் கலக்கிய சோமு சேகர், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அறந்தாங்கி நிஷா, மற்றும் நடிகை ரம்யா பாண்டியன் மற்றும் தொழிலதிபர் மாற்று சிவில் என்ஜினியர், ஊட்டச்சத்து நிபுணர் சம்யுக்தா சண்முகநாதன் கலந்துள்ளார், அழகன் திரைப்படத்தில் நடித்த சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் 2012 ஜூனியர் சூப்பர் சிங்கர்ஸ்  டைட்டில் ஆஜீத் காலிக் ஆகியோர் பங்குபெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்