கொரோனா குறித்தா? அதிமுக குழப்பம் குறித்தா? இன்று ஆளுநரை சந்திக்கும் இபிஎஸ்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிச்சாமி இன்று சந்திக்கிறார்.கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்கிறார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையானது கடந்த மார்ச்.,24ந் தேதி முதல் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு செப்.30-ம் தேதியோடு 8 கட்ட ஊரடங்குகள் முடிவடைந்தது. அக்.1ந்தேதி 9ம் கட்டமாக சில தளர்வுகளுடன் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டது.
இதன்படி கடந்த செப்.,1 தேதியுடன் இ-பாஸ் முறையானது ரத்து செய்யப்பட்டது, பேருந்து போக்குவரத்துக்கும் அனுமதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் ஆயிரத்துக்கு கீழாக குறைந்திருந்தத் தொற்று கடந்த 10 நாட்களாக ஆயிரத்துக்கும் மேலாக அதிகமாகி வருகிறது.
இந்த பாதிப்பை குறைக்கும் வகையில், பரிசோதனைகளை அதிகரித்தல், மூத்த குடிமக்கள், இணை நோய்கள் உள்ளவர்களுக்கு பரிசோதனை முடிவுகளில் முன்னுரிமை அளித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில், ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தை முதல்வர் பழனிச்சாமி இன்று மாலை சந்திக்க உள்ளார்.
கொரோனா பாதிப்புக்கு ஏற்பட்ட நாளிலிருந்து அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை அளித்து, தொடர் நடவடிக்கைகள் குறித்து விளக்கமும் அளித்து வருகிறார். இந்த வகையில் இன்று ஆளுநரை முதல்வர் சந்திக்க உள்ளார்.இந்த சந்தப்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழக சட்டம் -ஒழுங்கு தொடர்பான அறிக்கையும் அளிப்பார் என்றுத் தெரிகிறது.மேலும் முதல்வருடன், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலை மைச் செயலர் கே.சண்முகம் மற்றும் டிஜிபி ஜே.கே.திரிபாதி ஆகியோரும் இச்சந்திப்பில் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிச்சாமி இன்று சந்திப்பது கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தா? அல்லது அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பம் குறித்தா? என்று அரசியல் விமர்சகர் நோக்குகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
நேபாளத்தில் இன்று அதிகாலையில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. பீகாரிலும் லேசான அதிர்வு.!
February 28, 2025
தமிழ்நாடு வெல்லும்: “இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா?” – முதல்வர் ஸ்டாலின் .!
February 28, 2025
சீமான் வீட்டு காவலாளிகளுக்கு மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
February 28, 2025
தமிழ்நாட்டின் இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை மையம்!
February 28, 2025