சென்னை அணிக்கு 179 ரன்கள் வெற்றி இலக்கு..!
இன்றைய 18-வது அணியில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதி வருகிறது. இப்போட்டி, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல்,மாயங்க் அகர்வால் இருவரும் இறங்கினர். நிதானமாக விளையாடி மாயங்க் அகர்வால் 26 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர், இறங்கிய மந்தீப் சிங் 27 , நிக்கோலஸ் பூரன் 33 ரன்கள் எடுத்தனர்.
அதிரடியாக விளையாடி வந்த தொடக்க வீரர்கே.எல்.ராகுல் அரைசதம் விளாசி 63 ரன்கள் குவித்தார். இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 178 ரன்கள் எடுத்தனர்.
179 ரன்கள் இலக்குடன் சென்னை அணி களமிறங்க உள்ளது.