பாஜகவில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் திக்விஜய சிங் மகள்..!
முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த திக்விஜய சிங்கின் மகளும், துப்பாக்கிச் சுடும் வீராங்கனையான ஸ்ரேயாசி சிங் இன்று புதுதில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் கட்சித் தலைவர் பூபேந்திர யாதவ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
29 வயதான ஸ்ரேயாசி சிங், அர்ஜுனா விருது பெற்றவர், 2018 -ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர், 2014 -ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.